- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
Variyaar karungan madamaadhar · Thiruppugazh 98 lyrics with meaning · Thiruchendur

ராகம் காம்போதி / ஸஹானா · தாளம் சதுஸ்ர ஜம்பை (7)சந்தம் தனனா தனந்த ... தனதான
Variyaar karungan madamaadhar
Magavaa saidhondha madhuvaagi
Irupo thunaindhu meliyaadhe
Irudhaalinanpu tharuvaaye
Paripaa lananjey tharulvone
Parame surandranarulpaalaa
Arige savandran marugone
Alaivaa yamarndha perumaale.
திருச்செந்தூர் பாடல். செவ்வரி படர்ந்த கருங்கண் உடைய பெண்கள் மேலும் மக்கள் மேலும் உள்ள ஆசைத் தொடர்பில் சிக்கி இரவும் பகலும் நைந்து மெலியாமல், உன் இரு திருவடிகளில் அன்பு தா என்று புலவர் வேண்டுகிறார். உலகைக் காத்து அருள்பவன், பரமேசுவரனின் அருள் மகன், அரி கேசவனின் மருகன் முருகன். திருச்சீரலைவாயில் அமர்ந்த பெருமான் அவன்.
A short song of Thiruchendur. The poet asks not to waste away night and day, caught in the bonds of desire for dark-eyed women and attachment to children, but to be given love for Murugan's two feet. Murugan protects the world and grants grace; He is the son of Parameswara and the nephew of Hari Kesava. He is the lord who sits at Thiruchiralaivai.
வரியார் கருங்கண் மடமாதர் ... செவ்வரி படர்ந்த கருங்கண் உடைய இளம் பெண்களின் மேலும்
for young women with dark, red-veined eyes
மகவு ஆசை தொந்தம் அதுவாகி ... மக்கள் மேல் உள்ள ஆசைத் தொடர்பிலும் சிக்கி
and caught in the bond of love for children
இருபோதும் நைந்து மெலியாதே ... இரவும் பகலும் நைந்து மெலியாமல்
not wasting away night and day
இருதாளின் அன்பு தருவாயே ... உன் இரு திருவடிகளில் அன்பு தருவாயாக
give me love for Your two feet
பரிபாலனம் செய்து அருள்வோனே ... உலகைக் காத்து அருள்பவனே
who protects the world in grace
பரமேசுரன் தன் அருள்பாலா ... பரமேசுவரனின் அருள் மகனே
gracious son of Parameswara
அரி கேசவன் தன் மருகோனே ... அரி கேசவனான திருமாலின் மருமகனே
nephew of Hari Kesava
அலைவாய் அமர்ந்த பெருமாளே ... திருச்சீரலைவாயில் அமர்ந்த பெருமானே
O lord who sits at Alaivai
எல்லாப் பாடல்களும் · All songsஎல்லாத் தலங்களும் · All shrines