- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
Mooppur rucchevi kedpar rupperu · Thiruppugazh 93 lyrics with meaning · Thiruchendur

ஓம் சண்முகா சரணம்திருப்புகழ் · பாடல் 93
ராகம் மாயா மாளவ கெளளை · தாளம் ஆதி - 2 களைசந்தம் தாத்தத் தத்தன தாத்தத் தத்தன / தாத்தத் தத்தன ... தனதான
Mooppurrucchevi kedparrupperuMoocchurruccheyal thadumaari
Murkkas sorkural kaattik kakkidaMookkuk kudsaliyilaiyodum
Koppuk kattiyinaappis setriduKoottir pukkuyi ralaiyaamun
Kootrath thaththuva neekkip porkazhalKoottis satrarul purivaaye
Kaappup porkiri kottip patralarKaappaik kattavar kurunaadhaa
Kaattuk kudkura vaattik kuppalaKaappuk kuththira mozhivone
Vaayppurraththamizh maarkkath thidporulVaaykkus siththira murugone
Vaarththais sirpara theerththas sutralaiVaaykkud porpamar perumaale.
திருச்செந்தூர் பாடல். முதுமையில் காது கேளாமல், பெருமூச்சு வாங்கி, செயல் தடுமாறி, கடுமையான குரலில் இருமிக் கக்கி, மூக்கில் சளியும் கோழையும் கட்டி, துன்பம் தரும் இந்த உடல் என்ற கூட்டில் உயிர் அலைவதற்கு முன், எமனின் ஆட்சியை நீக்கி, உன் பொன் திருவடிகளைச் சேர்த்து அருள் என்று புலவர் வேண்டுகிறார். பொன் மலையான மேருவை வில்லாக வளைத்துப் பகைவரின் கோட்டைகளை அழித்த சிவனுக்குக் குருநாதன் முருகன். காட்டில் குறமகள் வள்ளியிடம் பல சாக்குகள் சொன்னவன். தமிழ் நெறியின் உட்பொருள் வாய்க்கச் செய்யும் அழகன். சொல்லுக்கு எட்டாத மேலான பொருளாகிப் புனித நீர் சூழ்ந்த திருச்சீரலைவாயில் அழகுடன் அமர்ந்த பெருமான்.
A song of Thiruchendur. Before life wanders out of this troublesome cage of a body, in old age, ears deaf, breath heaving, actions faltering, coughing and spitting with a harsh voice, nose clogged with phlegm, the poet asks Murugan to remove Yama's rule and graciously join him to His golden feet. Murugan is the guru of Shiva, who bent the golden mountain Meru as a bow and destroyed the enemies' fortresses. In the forest He told the hill girl Valli many clever excuses. He is the lovely one who grants the inner meaning of the Tamil way, the supreme truth beyond words, who sits in beauty at Thiruchiralaivai, ringed by sacred waters.
மூப்புற்றுச் செவி கேட்பு அற்று ... முதுமை அடைந்து காது கேளாமல்
grown old, ears deaf
பெருமூச்சுற்றுச் செயல் தடுமாறி ... பெருமூச்சு வாங்கிச் செயல் தடுமாறி
breath heaving, actions faltering
மூர்க்கச் சொல் குரல் காட்டிக் கக்கிட ... கடுமையான குரலில் இருமிக் கக்க
coughing and spitting with a harsh voice
மூக்குக்குள் சளி இளையோடும் கோப்புக் கட்டி ... மூக்கில் சளியும் கோழையும் கட்டி
nose clogged with mucus and phlegm
இனாப்பிச் செற்றிடு கூட்டில் புக்கு உயிர் அலையாமுன் ... துன்பம் தரும் இந்த உடல் என்ற கூட்டில் உயிர் அலைவதற்கு முன்
before life wanders out of this troublesome cage
கூற்றத் தத்துவம் நீக்கி ... எமனின் ஆட்சியை நீக்கி
removing the rule of Yama
பொற்கழல் கூட்டிச் சற்று அருள் புரிவாயே ... உன் பொன் திருவடிகளைச் சேர்த்துச் சிறிது அருள் செய்வாயாக
join me to Your golden feet and grant a little grace
காப்புப் பொற்கிரி கோட்டி ... பொன் மலையான மேருவை வில்லாக வளைத்து
bending the golden mountain Meru as a bow
பற்றலர் காப்பைக் கட்டவர் குருநாதா ... பகைவரின் கோட்டைகளை அழித்த சிவனுக்குக் குருநாதனே
guru of Shiva who destroyed the enemies' fortresses
காட்டுக்குள் குறவாட்டிக்குப் பல காப்புக் குத்திரம் மொழிவோனே ... காட்டில் குறமகள் வள்ளியிடம் பல சாக்குகளும் தந்திரச் சொற்களும் சொன்னவனே
who told the hill girl in the forest many clever excuses
வாய்ப்புற்ற அத்தமிழ் மார்க்கத்து இட்பொருள் வாய்க்கு ... பொருந்திய அந்தத் தமிழ் நெறியின் உட்பொருள் வாய்க்கும்படி
so that the inner meaning of the Tamil way is attained
சித்திர முருகோனே ... அழகிய முருகனே
O lovely Murugan
வார்த்தைச் சிற்பர ... சொல்லுக்கு எட்டாத மேலான பொருளே
supreme truth beyond words
தீர்த்தச் சுற்று அலைவாய்க்குள் பொற்பு அமர் பெருமாளே ... புனித நீர் சூழ்ந்த திருச்சீரலைவாயில் அழகுடன் அமர்ந்த பெருமானே
O lord who sits in beauty at Alaivai ringed by sacred waters
எல்லாப் பாடல்களும் · All songsஎல்லாத் தலங்களும் · All shrines