- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
Kanaiththa thirkkumip pongu kaarkkada · Thiruppugazh 259 lyrics with meaning · Thiruthani

ஓம் சண்முகா சரணம்திருப்புகழ் · பாடல் 259
ராகம் கானடா · தாளம் அங்கதாளம் (11 1/2) (தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2)சந்தம் தனத்த தத்தனத் தந்த தாத்தன ... தந்ததான
Kanaiththa thirkkumip pongu kaarkkada londrinaale
Karuththaracchivath thangi vaayththezhu thingalaale
Thanikkaruppuvir kondu veezhththasa rangalaale
Thagaiththoruththiyeyth thingu yaakkaisazhangalaamo
Thinaippunaththinaip pandu kaaththamadandhaigelvaa
Thiruththanippadhik kundrin metrigazh kandhavele
Panaikka rakkayath thandar potriya mangaipaagaa
Padaiththaliththazhik kundhri moorththigal thambiraane.
முருகன் மீது காதல் கொண்ட ஒரு பெண்ணின் நிலையில் பாடப்பட்டது. ஒலித்து அதிரும் கரிய கடலாலும், நெருப்புப் போலச் சுடும் நிலவாலும், கரும்பு வில்லால் மன்மதன் எய்யும் அம்புகளாலும் இந்தப் பெண் இளைத்து உடல் தளரலாமோ? முன்பு தினைப்புனம் காத்த வள்ளியின் கணவனே, திருத்தணி மலை மேல் விளங்கும் கந்தனே. இந்திரன் போற்றிய தெய்வானையின் நாயகனே, படைத்துக் காத்து அழிக்கும் மும்மூர்த்திகளுக்கும் தலைவனே.
This song speaks as a girl in love with Murugan. Should she wither and her body grow weak, hurt by the roaring dark sea, the moon that burns like fire, and the arrows Kama shoots from his cane bow? Husband of Valli, who once guarded the millet field. Skanda who shines on Thiruthani hill. Lord of Deivanai, praised by Indra of the elephant with a palm-like trunk. Master of the Three who create, protect and destroy.
கனைத்து அதிர்க்கும் இப்பொங்கு கார்க்கடல் ஒன்றினாலே ... ஒலித்து அதிரும் இந்தப் பொங்கும் கரிய கடலாலும்
by this roaring, surging dark sea
கறுத்து அறச் சிவத்து அங்கி வாய்த்து எழு திங்களாலே ... மாலையில் கருத்துப் பின் சிவந்து, நெருப்புப் போல எழும் நிலவாலும்
by the moon rising red and burning like fire
தனிக் கருப்புவில் கொண்டு வீழ்த்த சரங்களாலே ... ஒப்பற்ற கரும்பு வில்லால் மன்மதன் எய்த அம்புகளாலும்
by the arrows shot from the cane bow
தகைத்து ஒருத்தி எய்த்து ... தடுமாறி இந்தப் பெண் இளைத்து
this girl, faltering and wasting
இங்கு யாக்கை சழங்கலாமோ ... இங்கே உடல் தளரலாமோ
should her body grow weak here
தினைப்புனத்தினைப் பண்டு காத்த மடந்தை கேள்வா ... முன்பு தினைப்புனத்தைக் காத்த வள்ளியின் கணவனே
husband of the maid who once guarded the millet field
திருத்தணிப் பதிக் குன்றின்மேல் திகழ் கந்தவேளே ... திருத்தணி மலை மேல் விளங்கும் கந்தனே
Skanda who shines on Thiruthani hill
பனைக்கரக் கயத்து அண்டர் போற்றிய மங்கைபாகா ... பனை போன்ற துதிக்கை கொண்ட யானையை உடைய இந்திரன் போற்றிய தெய்வானையின் நாயகனே
Lord of Deivanai, praised by Indra of the elephant
படைத்து அளித்து அழிக்கும் த்ரிமூர்த்திகள் தம்பிரானே ... படைத்து, காத்து, அழிக்கும் மும்மூர்த்திகளுக்கும் தலைவனே
master of the Three who create, protect and destroy
எல்லாப் பாடல்களும் · All songsஎல்லாத் தலங்களும் · All shrines