- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
U ramur rirusep penavad · Thiruppugazh 831 lyrics with meaning · Ettigudi

சந்தம் தனனத் தனனத் தனனத் தனனத் / தனனத் தனனத் ... தனதான
U ramurrirusep penavaddamumothThilagip pulagith thidamaaye
Udaisurrumidais sumaiyok kaaduthThamidhak keruvath thudanveeru
Tharamoth thupayak kalapath thalamikKavanath tharunath thanameedhe
Saruvis saruvith thazhuvith thazhuvithThavamar kaviduth thuzhalveno
Ariputh thirasith thasaak kadavudKarumaith thirumaith thunavele
Adalkuk kudanar kodigaddiyanarthThasurap padaiyaip poruvone
Parivurravaruk karulvaith tharulvithThagamuth thamizhaip pagarvone
Pazhanath tholirmuth thaniyeddigudipPadhiyir kumarap perumaale.
செப்புக் குடம் போன்ற அழகும், உடை சுற்றிய இடையும், செருக்கும் கொண்ட, சந்தனம் பூசிய இளம் பெண்களை நெருங்கி நெருங்கித் தழுவித் தழுவி, தவத்தை விட்டு நான் உழல்வேனோ? திருமாலின் மகனான மன்மதனுக்கு அருமை மைத்துனனான வேளே. வலிய சேவல் கொடியைக் கட்டி, தீமை செய்யும் அசுரப் படையோடு போர் செய்தவனே. அன்புடையவருக்கு அருள் தந்து, ஞானம் நிறைந்த முத்தமிழைச் சொல்பவனே. வயல்களில் முத்துக்கள் ஒளிரும் எட்டிகுடியில் வீற்றிருக்கும் குமரப் பெருமானே.
Shall I give up penance and wander, drawing ever closer and embracing again and again young women with charms round as copper pots, waists wrapped in cloth, boundless pride and youthful beauty smeared with sandal? Vel, dear cousin of Manmatha, the god born of the mind who is Hari's son. You who raised the fine banner of the mighty rooster and fought the evil asura army. You who give grace to those who love You and speak three branched Tamil full of wisdom. Lord Kumara of Ettikudi, where pearls shine in the fields.
உரம் உற்று இரு செப்பு என வட்டமும் ஒத்து ... செப்புக் குடம் போல உருண்ட
round as copper pots
இளகிப் புளகித்து இடமாயே ... இளமையும் சிலிர்ப்பும் கொண்ட அழகும்
youthful, thrilling charms
உடை சுற்றும் இடைச் சுமை ஒக்க அடுத்து ... உடை சுற்றிய இடையும்
waists wrapped in cloth
அமிதக் கெறுவத்துடன் வீறு தரம் ஒத்து ... அளவற்ற செருக்கோடு
with boundless pride
உபயக் களபத் தளம் மிக்க வனத் தருணத் தனமீதே ... சந்தனம் பூசிய இளமை அழகின் மேல்
upon youthful beauty smeared with sandal
சருவிச் சருவித் தழுவித் தழுவி ... நெருங்கி நெருங்கித் தழுவித் தழுவி
drawing ever closer and embracing again and again
தவம் அற்கவிடுத்து உழல்வேனோ ... தவத்தை விட்டு உழல்வேனோ
shall I give up penance and wander
அரி புத்திர சித்தச அக்கடவுட்கு ... திருமாலின் மகனான மனத்தில் பிறந்த மன்மதன் என்ற கடவுளுக்கு
to that god born of the mind, Hari's son Manmatha
அருமைத் திருமைத்துன வேளே ... அருமையான மைத்துனனான வேளே
Vel, his dear cousin
அடல் குக்குட நல் கொடி கட்டி ... வலிய சேவல் கொடியைக் கட்டி
raising the fine banner of the mighty rooster
அனர்த்த அசுரப் படையைப் பொருவோனே ... தீமை செய்யும் அசுரப் படையோடு போர் செய்தவனே
You who fought the evil asura army
பரிவுற்றவருக்கு அருள் வைத்து ... அன்புடையவருக்கு அருள் தந்து
giving grace to those who love You
அருள் வித்தக முத்தமிழைப் பகர்வோனே ... அருளும் ஞானமும் நிறைந்த முத்தமிழைச் சொல்பவனே
You who speak three branched Tamil full of grace and wisdom
பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடிப் பதியில் குமரப் பெருமாளே ... வயல்களில் முத்துக்கள் ஒளிரும் எட்டிகுடியில் வீற்றிருக்கும் குமரப் பெருமானே
Lord Kumara of Ettikudi, where pearls shine in the fields
எல்லாப் பாடல்களும் · All songsஎல்லாத் தலங்களும் · All shrines