- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
Andarpadhi kudiyera mandasurar u · Thiruppugazh 724 lyrics with meaning · Siruvai

ராகம் ஸிந்து பைரவி · தாளம் கண்டசாபு (2 1/2) ((எடுப்பு - 3/4 தள்ளி))சந்தம் தந்ததன தனதான தந்ததன தனதான / தந்ததன தனதான ... தனதான
Andarpadhi kudiyera mandasurar urumaaraAndarmana magizhmeera varulaale
Andhariyodudanaadu sangaranu magizhkooraAingaranu mumaiyaalu magizhvaaga
Mandalamu munivoru mendisaiyi lulaperuManjinanu mayanaaru medhirkaana
Mangaiyudanaridhaanu minpamura magizhkooraMaindhumayi ludanaadi varavenum
Pundariga vizhiyaala andarmagal manavaalaaPundhinirai yarivaala vuyartholaa
Pongugada ludanaagam vinduvaraiyigalsaaduPonparavu kadhirveesu vadivelaa
Thandarala manimaarpa sembonezhil seriroopaThandamizhin miguneya murugesaa
Sandhamu madiyaarkal sindhaiyadhu kudiyaanaThansiruvai thanilmevu perumaale.
தேவர்கள் மீண்டும் தம் நகரில் குடியேற, அசுரர் உருவழிய, தேவர் மனம் மகிழ, உமையுடன் ஆடும் சங்கரனும் விநாயகரும் உமையும் மகிழ, உலகத்தாரும் முனிவரும் எண்திசையோரும் இந்திரனும் பிரமனும் எதிரே காண, திருமகளுடன் திருமாலும் மகிழ, வலிய மயிலுடன் ஆடி நீ வர வேண்டும். தாமரைக் கண்ணுடைய தெய்வயானையின் மணவாளனே, அறிவாளனே, கடலும் மலையும் பிளக்கப் பகைவரைத் தாக்கிய வடிவேலனே. முத்துமாலை அணிந்த மார்பனே, தமிழில் மிகுந்த அன்புடைய முருகேசா, அடியார் மனதில் குடியிருக்கும் சிறுவாபுரியில் வீற்றிருக்கும் பெருமானே.
Come dancing with Your mighty peacock, so the gods return to their city, the asuras lose their form, the gods' hearts overflow, Shankara who dances with Uma rejoices, Vinayaka and Uma are glad, the world, the sages, those of the eight directions, Indra and Brahma behold You, and Vishnu with Lakshmi delights. Bridegroom of lotus eyed Deivanai, wise one, spear bearer who struck the foes till sea and mountain split. You of the pearl garlanded chest, Murugesa who loves Tamil dearly, Lord of cool Siruvapuri, who lives in His devotees' hearts.
அண்டர்பதி குடியேற ... தேவர்கள் தம் நகரில் மீண்டும் குடியேற
so the gods return to their city
மண்டு அசுரர் உருமாற ... நெருங்கி வந்த அசுரர்கள் உருவழிய
so the thronging asuras lose their form
அண்டர் மனம் மகிழ் மீற அருளாலே ... தேவர் மனம் மகிழ்ச்சியில் பொங்க அருளால்
so by grace the gods' hearts overflow with joy
அந்தரியொடு உடனாடு சங்கரனும் மகிழ் கூர ... உமையுடன் சேர்ந்து ஆடும் சங்கரனும் மகிழ
so Shankara who dances with Uma rejoices
ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக ... விநாயகரும் உமையும் மகிழ
so Vinayaka and Uma are glad
மண்டலமும் முநிவோரும் எண்திசையில் உள பேரும் ... உலகத்தாரும் முனிவர்களும் எட்டுத் திசையில் உள்ளவர்களும்
the world, the sages and those of the eight directions
மஞ்சினனும் அயனாரும் எதிர்காண ... இந்திரனும் பிரமனும் எதிரே காண
and Indra and Brahma behold You
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ் கூற ... திருமகளுடன் திருமாலும் இன்பமுற்று மகிழ
and Vishnu with Lakshmi delights
மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் ... வலிமையான மயிலுடன் ஆடி நீ வர வேண்டும்
You must come dancing with Your mighty peacock
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா ... தாமரைக் கண்ணுடைய தேவமகள் தெய்வயானையின் மணவாளனே
bridegroom of lotus eyed Deivanai, daughter of the gods
புந்தி நிறை அறிவாள ... புத்தி நிறைந்த ஞானியே
wise one full of understanding
உயர் தோளா ... உயர்ந்த தோள்களுடையவனே
You of lofty shoulders
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரை இகல் சாடு ... பொங்கும் கடலும் மலைகளும் பிளக்கப் பகைவரைத் தாக்கிய
who struck the foes till the surging sea and mountains split
பொன் பரவு கதிர் வீசு வடிவேலா ... பொன்னொளி வீசும் கூர்வேலனே
bearer of the sharp spear that sheds golden light
தண் தரள மணிமார்ப ... குளிர்ந்த முத்துமாலை அணிந்த மார்பனே
You of the cool pearl garlanded chest
செம்பொன் எழில் செறி ரூப ... செம்பொன் அழகு நிறைந்த உருவனே
form full of red gold beauty
தண்டமிழின் மிகு நேய முருகேசா ... இனிய தமிழில் மிகுந்த அன்புடைய முருகேசனே
Murugesa who loves sweet Tamil dearly
சந்தமும் அடியார்கள் சிந்தை அது குடியான ... எப்போதும் அடியார்கள் மனதில் குடியிருக்கும்
ever dwelling in the hearts of devotees
தண் சிறுவைதனில் மேவு பெருமாளே ... குளிர்ந்த சிறுவாபுரியில் வீற்றிருக்கும் பெருமானே
Lord of cool Siruvapuri
எல்லாப் பாடல்களும் · All songsஎல்லாத் தலங்களும் · All shrines