அதிகாரம் 8 · அன்புடைமை

The Possession of Love · அறத்துப்பால் · இல்லறவியல் · குறள் 71–80

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது, அவ் வாழ்க்கைத்துணையும் புதல்வரும் முதலிய தொடர்புடையார்கண் காதலுடையன் ஆதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். இல்லறம் இனிது நடத்தலும், பிற உயிர்கள்மேல் அருள்பிறத்தலும் அன்பின் பயன் ஆகலின், இது வேண்டப்பட்டது. வாழ்க்கைத்துணை மேல் அன்பு இல்வழி இல்லறம் இனிது நடவாமை 'அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும், துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை' (சிலப்.16,71-73.

குறள் 71

Anpirkum Unto Ataikkundhaazh Aarvalar

Punkaneer Poosal Tharum

அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்

— மு. வரதராசனார்

குறள் 72

Anpilaar Ellaam Thamakkuriyar Anputaiyaar

Enpum Uriyar Pirarkku

அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்

— மு. வரதராசனார்

குறள் 73

Anpotu Iyaindha Vazhakkenpa Aaruyirkku

Enpotu Iyaindha Thotarpu

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

— மு. வரதராசனார்

குறள் 74

Anpu Eenum Aarvam Utaimai

Adhueenum Nanpu Ennum Naataach

அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்

— மு. வரதராசனார்

குறள் 75

Anputru Amarndha Vazhakkenpa Vaiyakaththu

Inputraar Eydhum Sirappu

உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்

— மு. வரதராசனார்

குறள் 76

Araththirke Anpusaar Penpa Ariyaar

Maraththirkum Aqdhe Thunai

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது

— மு. வரதராசனார்

குறள் 77

Enpi Ladhanai Veyilpolak Kaayume

Anpi Ladhanai Aram

எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

— மு. வரதராசனார்

குறள் 78

Anpakath Thillaa Uyirvaazhkkai Vanpaarkan

Vatral Marandhalirth Thatru

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

— மு. வரதராசனார்

குறள் 79

Puraththurup Pellaam Evanseyyum Yaakkai

Akaththuruppu Anpi Lavarkku

உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.

— மு. வரதராசனார்

குறள் 80

Anpin Vazhiyadhu Uyirnilai Aqdhilaarkku

Enpudhol Porththa Utampu

அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்

— மு. வரதராசனார்

Say thanks