Perumavatrul Yaamarivadhu Illai Arivarindha
Makkatperu Alla Pira
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
— மு. வரதராசனார்
The Wealth of Children · அறத்துப்பால் · இல்லறவியல் · குறள் 61–70
அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படுங் கடன் மூன்றனுள் முனிவர் கடன்கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின், அக்கடன் இறுத்தற்பொருட்டு நன்மக்களைப் பெறுதல். அதிகார முறைமை மேலே பெறப்பட்டது.
Perumavatrul Yaamarivadhu Illai Arivarindha
Makkatperu Alla Pira
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
— மு. வரதராசனார்
Ezhupirappum Theeyavai Theentaa Pazhipirangaap
Panputai Makkat Perin
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
— மு. வரதராசனார்
Thamporul Enpadham Makkal Avarporul
Thamdham Vinaiyaan Varum
தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
— மு. வரதராசனார்
Amizhdhinum Aatra Inidhedham Makkal
Sirukai Alaaviya Koozh
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
— மு. வரதராசனார்
Makkalmey Theental Utarkinpam Matru
Avar Sorkettal Inpam Sevikku
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
— மு. வரதராசனார்
Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham
Makkal Mazhalaichchol Kelaa Thavar
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
— மு. வரதராசனார்
Thandhai Makarkaatrum Nandri Avaiyaththu
Mundhi Iruppach Cheyal
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
— மு. வரதராசனார்
Thammindham Makkal Arivutaimai Maanilaththu
Mannuyirk Kellaam Inidhu
தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
— மு. வரதராசனார்
Eendra Pozhudhin Peridhuvakkum Thanmakanaich
Chaandron Enakketta Thaai
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
— மு. வரதராசனார்
Makandhandhaikku Aatrum Udhavi Ivandhandhai
Ennotraan Kol Enum Sol
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
— மு. வரதராசனார்