Sirappu Eenum Selvamum Eenum
Araththinooungu Aakkam Evano Uyirkku
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?
— மு. வரதராசனார்
Assertion of the Strength of Virtue · அறத்துப்பால் · பாயிரவியல் · குறள் 31–40
அஃதாவது, அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள் ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். 'சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல'(புறநா.31.
Sirappu Eenum Selvamum Eenum
Araththinooungu Aakkam Evano Uyirkku
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?
— மு. வரதராசனார்
Araththinooungu Aakkamum Illai Adhanai
Maraththalin Oongillai Ketu
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
— மு. வரதராசனார்
Ollum Vakaiyaan Aravinai Ovaadhe
Sellumvaai Ellaanj Cheyal
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
— மு. வரதராசனார்
Manaththukkan Maasilan Aadhal Anaiththu
Aran Aakula Neera Pira
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
— மு. வரதராசனார்
Azhukkaaru Avaavekuli Innaachchol Naankum
Izhukkaa Iyandradhu Aram
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
— மு. வரதராசனார்
Andrarivaam Ennaadhu Aranjeyka Matradhu
Pondrungaal Pondraath Thunai
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.
— மு. வரதராசனார்
Araththaaru Ithuvena Ventaa Sivikai
Poruththaanotu Oorndhaan Itai
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
— மு. வரதராசனார்
Veezhnaal Pataaamai Nandraatrin Aqdhoruvan
Vaazhnaal Vazhiyataikkum Kal
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
— மு. வரதராசனார்
Araththaan Varuvadhe Inpam Mar
Rellaam Puraththa Pukazhum Ila
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
— மு. வரதராசனார்
Seyarpaala Thorum Arane Oruvarku
Uyarpaala Thorum Pazhi
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
— மு. வரதராசனார்