அதிகாரம் 21 · தீவினையச்சம்

Dread of Evil Deeds · அறத்துப்பால் · இல்லறவியல் · குறள் 201–210

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது, பாவங்களாயின செய்தற்கு அஞ்சுதல். இதனான் மெய்யின்கண் நிகழும் பாவங்கள் எல்லாம் தொகுத்து விளக்குகின்றார் ஆகலின். இது பயன்இல சொல்லாமையின்பின் வைக்கப்பட்டது.

குறள் 201

Theevinaiyaar Anjaar Vizhumiyaar Anjuvar

Theevinai Ennum Serukku

தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

— மு. வரதராசனார்

குறள் 202

Theeyavai Theeya Payaththalaal Theeyavai

Theeyinum Anjap Patum

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

— மு. வரதராசனார்

குறள் 203

Arivinul Ellaan Thalaiyenpa Theeya

Seruvaarkkum Seyyaa Vital

தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.

— மு. வரதராசனார்

குறள் 204

Marandhum Piranketu Soozharka Soozhin

Aranjoozham Soozhndhavan Ketu

பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

— மு. வரதராசனார்

குறள் 205

Ilan Endru Theeyavai Seyyarka
Seyyin Ilanaakum Matrum Peyarththu

யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

— மு. வரதராசனார்

குறள் 206

Theeppaala Thaanpirarkan Seyyarka Noippaala

Thannai Atalventaa Thaan

துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

— மு. வரதராசனார்

குறள் 207

Enaippakai Yutraarum Uyvar Vinaippakai

Veeyaadhu Pinsendru Atum

எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

— மு. வரதராசனார்

குறள் 208

Theeyavai Seydhaar Ketudhal Nizhaldhannai

Veeyaadhu Atiurain Thatru

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

— மு. வரதராசனார்

குறள் 209

Thannaiththaan Kaadhala Naayin Enaiththondrum

Thunnarka Theevinaip Paal

ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

— மு. வரதராசனார்

குறள் 210

Arungetan Enpadhu Arika Marungotith

Theevinai Seyyaan Enin

ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

— மு. வரதராசனார்

Say thanks