அதிகாரம் 22 · ஒப்புரவறிதல்

Duty to Society · அறத்துப்பால் · இல்லறவியல் · குறள் 211–220

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது உலக நடையினை அறிந்து செய்தல். உலகநடை வேதநடை போல அறநூல்களுட் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யுந் தன்மைத்தாகலின், ஒப்புரவு அறிதலென்றார். மேல், மனம் மொழி மெய்களால் தவிரத் தகுவன கூறினார், இனிச் செய்யத் தகுவனவற்றுள் எஞ்சி நின்றன கூறுகின்றாராகலின், இது தீவினையச்சத்தின் பின் வைக்கப்பட்டது.

குறள் 211

Kaimmaaru Ventaa Katappaatu Maarimaattu

En Aatrung Kollo Ulaku

இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.

— மு. வரதராசனார்

குறள் 212

Thaalaatrith Thandha Porulellaam Thakkaarkku

Velaanmai Seydhar Poruttu

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

— மு. வரதராசனார்

குறள் 213

Puththe Lulakaththum Eentum Peralaridhe

Oppuravin Nalla Pira

பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

— மு. வரதராசனார்

குறள் 214

Oththa Tharavon Uyirvaazhvaan Matraiyaan

Seththaarul Vaikkap Patum

ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

— மு. வரதராசனார்

குறள் 215

Ooruni Neernirain Thatre Ulakavaam

Perari Vaalan Thiru

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

— மு. வரதராசனார்

குறள் 216

Payanmaram Ulloorp Pazhuththatraal Selvam

Nayanutai Yaankan Patin

ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

— மு. வரதராசனார்

குறள் 217

Marundhaakith Thappaa Maraththatraal Selvam

Perundhakai Yaankan Patin

ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.

— மு. வரதராசனார்

குறள் 218

Itanil Paruvaththum Oppuravirku Olkaar

Katanari Kaatchi Yavar

ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

— மு. வரதராசனார்

குறள் 219

Nayanutaiyaan Nalkoorndhaa Naadhal Seyumneera

Seyyaadhu Amaikalaa Vaaru

ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

— மு. வரதராசனார்

குறள் 220

Oppuravi Naalvarum Ketenin Aqdhoruvan

Vitrukkol Thakka Thutaiththu

ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.

— மு. வரதராசனார்

Say thanks