அதிகாரம் 20 · பயனில சொல்லாமை

Against Vain Speaking · அறத்துப்பால் · இல்லறவியல் · குறள் 191–200

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது, தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பம் ஆகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லாமை. பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல் என வாக்கின்கண் நிகழும் பாவம் நான்கனுள், பொய் துறந்தார்க்கு அல்லது ஒருதலையாகக் கடியலாகாமையின், அஃது ஒழித்து இல்வாழ்வாரால் கடியப்படும் ஏனை மூன்றனுள், கடுஞ்சொல் இனியவை கூறலானும், குறளை புறங்கூறாமையானும் விலக்கி, நின்ற பயனில் சொல் இதனான் விலக்குகின்றார் ஆகலின், இது புறங்கூறாமையின் பின் வைக்கப்பட்டது.

குறள் 191

Pallaar Muniyap Payanila Solluvaan

Ellaarum Ellap Patum

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்

— மு. வரதராசனார்

குறள் 192

Payanila Pallaarmun Sollal Nayanila

Nattaarkan Seydhalir Reedhu

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

— மு. வரதராசனார்

குறள் 193

Nayanilan Enpadhu Sollum Payanila

Paarith Thuraikkum Urai

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

— மு. வரதராசனார்

குறள் 194

Nayansaaraa Nanmaiyin Neekkum Payansaaraap

Panpilsol Pallaa Rakaththu

பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

— மு. வரதராசனார்

குறள் 195

Seermai Sirappotu Neengum Payanila

Neermai Yutaiyaar Solin

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

— மு. வரதராசனார்

குறள் 196

Payanil Sol Paaraattu Vaanai
Makanenal Makkat Padhati Yenal

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

— மு. வரதராசனார்

குறள் 197

Nayanila Sollinunj Cholluka Saandror

Payanila Sollaamai Nandru

அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

— மு. வரதராசனார்

குறள் 198

Arumpayan Aayum Arivinaar Sollaar

Perumpayan Illaadha Sol

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்

— மு. வரதராசனார்

குறள் 199

Poruldheerndha Pochchaandhunj Chollaar Maruldheerndha

Maasaru Kaatchi Yavar

மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

— மு. வரதராசனார்

குறள் 200

Solluka Sollir Payanutaiya Sollarka

Sollir Payanilaach Chol

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

— மு. வரதராசனார்

Say thanks