அதிகாரம் 129 · புணர்ச்சி விதும்பல்

Desire for Reunion · காமத்துப்பால் · கற்பியல் · குறள் 1281–1290

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது, தலைமகனும் தலைமகளும் புணர்ச்சிக்கண்ணே விரைதல் . மேற் புணர்ச்சி மிகுதிபற்றித் தலைமகன் பிரிதற் குறிப்பு அறிவுறுத்தத் தலைமகள், அவன் மாட்டே நிகழாது வேட்கை மிகவினாற் பின்னும் தன்கண்ணே நிகழ்தலான் . இது குறிப்பு அறிவுறுத்தலின் பின் வைக்கப்பட்டது.

குறள் 1281

Ullak Kaliththalum Kaana Makizhdhalum

Kallukkil Kaamaththir Kuntu

நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு

— மு. வரதராசனார்

குறள் 1282

Thinaiththunaiyum Ootaamai Ventum Panaith
Thunaiyum Kaamam Niraiya Varin

காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

— மு. வரதராசனார்

குறள் 1283

Penaadhu Petpave Seyyinum Konkanaik

Kaanaa Thamaiyala Kan

என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

— மு. வரதராசனார்

குறள் 1284

Ootarkan Sendrenman Thozhi Adhumarandhu

Kootarkan Sendradhu En Nenju

தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

— மு. வரதராசனார்

குறள் 1285

Ezhudhungaal Kolkaanaak Kannepol Konkan

Pazhikaanen Kanta Itaththu

மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

— மு. வரதராசனார்

குறள் 1286

Kaanungaal Kaanen Thavaraaya Kaanaakkaal

Kaanen Thavaral Lavai

காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

— மு. வரதராசனார்

குறள் 1287

Uyththal Arindhu Punalpaai Pavarepol

Poiththal Arindhen Pulandhu

வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ?

— மு. வரதராசனார்

குறள் 1288

Iliththakka Innaa Seyinum Kaliththaarkkuk

Kallatre Kalvanin Maarpu

கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

— மு. வரதராசனார்

குறள் 1289

Malarinum Mellidhu Kaamam Silaradhan

Sevvi Thalaippatu Vaar

காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

— மு. வரதராசனார்

குறள் 1290

Kannin Thuniththe Kalanginaal Pulludhal

Enninum Thaanvidhup Putru

கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.

— மு. வரதராசனார்

Say thanks