அதிகாரம் 128 · குறிப்பறிவுறுத்தல்

The Reading of the Signs · காமத்துப்பால் · கற்பியல் · குறள் 1271–1280

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது, தலைமகன், தலைமகள், தோழி என்ற இவர் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல் . இது பிரிந்து போய தலைமகன் வந்து கூடியவழி நிகழ்வதாகலின், அவர் வயின் விதும்பலின்பின் வைக்கப்பட்டது.

குறள் 1271

Karappinung Kaiyikan Thollaanin Unkan

Uraikkal Uruvadhon Runtu

நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.

— மு. வரதராசனார்

குறள் 1272

Kanniraindha Kaarikaik Kaamperdhot Pedhaikkup

Penniraindha Neermai Peridhu

கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.

— மு. வரதராசனார்

குறள் 1273

Maniyil Thikazhdharu Noolpol Matandhai

Aniyil Thikazhvadhondru Untu

( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

— மு. வரதராசனார்

குறள் 1274

Mukaimokkul Ulladhu Naatrampol Pedhai

Nakaimokkul Ulladhon Runtu

அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.

— மு. வரதராசனார்

குறள் 1275

Seridhoti Seydhirandha Kallam Urudhuyar

Theerkkum Marundhondru Utaiththu

காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.

— மு. வரதராசனார்

குறள் 1276

Peridhaatrip Petpak Kalaththal Aridhaatri

Anpinmai Soozhva Thutaiththu

பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

— மு. வரதராசனார்

குறள் 1277

Thannan Thuraivan Thanandhamai Namminum

Munnam Unarndha Valai

குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னம‌ே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!

— மு. வரதராசனார்

குறள் 1278

Nerunatruch Chendraarem Kaadhalar Yaamum

Ezhunaalem Meni Pasandhu

எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.

— மு. வரதராசனார்

குறள் 1279

Thotinokki Mendholum Nokki Atinokki

Aqdhaan Tavalsey Thadhu

தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.

— மு. வரதராசனார்

குறள் 1280

Penninaal Penmai Utaiththenpa Kanninaal

Kaamanoi Solli Iravu

கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.

— மு. வரதராசனார்

Say thanks