அதிகாரம் 127 · அவர்வயின் விதும்பல்

Mutual Desire · காமத்துப்பால் · கற்பியல் · குறள் 1261–1270

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது, சேயிடைப் பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகவினான் ஒருவரை யொருவர் காண்டற்கு விரைதல் . தலைமகற் பிரிவும் தலைமகள் ஆற்றாமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின் இருவரையும் சுட்டிப் பொதுவாகிய பன்மைப் பாலாற் கூறினார். (தலைமகள் காண்டல் விதுப்பினால் சொல்லியது.

குறள் 1261

Vaalatrup Purkendra Kannum Avarsendra

Naalotrith Theyndha Viral

என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.

— மு. வரதராசனார்

குறள் 1262

Ilangizhaai Indru Marappinen Tholmel

Kalangazhiyum Kaarikai Neeththu

தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.

— மு. வரதராசனார்

குறள் 1263

Urannasaii Ullam Thunaiyaakach Chendraar

Varalnasaii Innum Ulen

வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.

— மு. வரதராசனார்

குறள் 1264

Kootiya Kaamam Pirindhaar Varavullik

Kotuko Terumen Nenju

முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.

— மு. வரதராசனார்

குறள் 1265

Kaankaman Konkanaik Kannaarak Kantapin

Neengumen Mendhol Pasappu

என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.

— மு. வரதராசனார்

குறள் 1266

Varukaman Konkan Orunaal Parukuvan

Paidhalnoi Ellaam Keta

என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

— மு. வரதராசனார்

குறள் 1267

Pulappenkol Pulluven Kollo Kalappenkol

Kananna Kelir Viran

என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?

— மு. வரதராசனார்

குறள் 1268

Vinaikalandhu Vendreeka Vendhan Manaikalandhu

Maalai Ayarkam Virundhu

அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.

— மு. வரதராசனார்

குறள் 1269

Orunaal Ezhunaalpol Sellumsen Sendraar

Varunaalvaiththu Engu Pavarkku

தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.

— மு. வரதராசனார்

குறள் 1270

Perinennaam Petrakkaal Ennaam Urinennaam

Ullam Utaindhukkak Kaal

துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?

— மு. வரதராசனார்

Say thanks