Kaamam Uzhandhu Varundhinaarkku Emam
Matalalladhu Illai Vali
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
— மு. வரதராசனார்
The Abandonment of Reserve · காமத்துப்பால் · களவியல் · குறள் 1131–1140
அஃதாவது, சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் தோழிக்குத் தன் நாண் துறவு உரைத்தலும், அறத்தொடு நிற்பிக்கலுற்ற தலைமகள் அவட்குத் தன் நாண் துறவு உரைத்தலும் ஆம் . இது காதல் மிக்குழி நிகழ்வது ஆகலின், காதற்சிறப்புஉரைத்தலின் பின் வைக்கப்பட்டது.
Kaamam Uzhandhu Varundhinaarkku Emam
Matalalladhu Illai Vali
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
— மு. வரதராசனார்
Nonaa Utampum Uyirum Matalerum
Naaninai Neekki Niruththu
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
— மு. வரதராசனார்
Naanotu Nallaanmai Pantutaiyen Indrutaiyen
Kaamutraar Erum Matal
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.
— மு. வரதராசனார்
Kaamak Katumpunal Uykkum Naanotu
Nallaanmai Ennum Punai
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.
— மு. வரதராசனார்
Thotalaik Kurundhoti Thandhaal Matalotu
Maalai Uzhakkum Thuyar
மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.
— மு. வரதராசனார்
Mataloordhal Yaamaththum Ulluven Mandra
Patalollaa Pedhaikken Kan
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
— மு. வரதராசனார்
Katalanna Kaamam Uzhandhum Mataleraap
Pennin Perundhakka Thil
கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.
— மு. வரதராசனார்
Niraiyariyar Manaliyar Ennaadhu Kaamam
Maraiyirandhu Mandru Patum
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.
— மு. வரதராசனார்
Arikilaar Ellaarum Endreen Kaamam
Marukin Marukum Maruntu
அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.
— மு. வரதராசனார்
Yaamkannin Kaana Nakupa Arivillaar
Yaampatta Thaampataa Aaru
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
— மு. வரதராசனார்