அதிகாரம் 113 · காதற் சிறப்புரைத்தல்

Declaration of Love"s special Excellence · காமத்துப்பால் · களவியல் · குறள் 1121–1130

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது, தலைமகன் தன் காதல் மிகுதி கூறலும், தலைமகள் தன் காதல் மிகுதி கூறலும் ஆம் . இது, புணர்ச்சியும் நலனும் பற்றி நிகழ்வதாகலின், புணர்ச்சி மகிழ்தல், நலம் புனைந்து உரைத்தல்களின் பின் வைக்கப்பட்டது.

குறள் 1121

Paalotu Thenkalan Thatre Panimozhi

Vaaleyiru Ooriya Neer

மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

— மு. வரதராசனார்

குறள் 1122

Utampotu Uyiritai Ennamar Ranna

Matandhaiyotu Emmitai Natpu

இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

— மு. வரதராசனார்

குறள் 1123

Karumaniyir Paavaainee Podhaayaam Veezhum

Thirunudharku Illai Itam

என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.

— மு. வரதராசனார்

குறள் 1124

Vaazhdhal Uyirkkannal Aayizhai Saadhal

Adharkannal Neengum Itaththu

ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.

— மு. வரதராசனார்

குறள் 1125

Ulluvan Manyaan Marappin Marappariyen

Ollamark Kannaal Kunam

போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே.

— மு. வரதராசனார்

குறள் 1126

Kannullin Pokaar Imaippin Parukuvaraa

Nunniyarem Kaadha Lavar

எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

— மு. வரதராசனார்

குறள் 1127

Kannullaar Kaadha Lavaraakak Kannum

Ezhudhem Karappaakku Arindhu

எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.

— மு. வரதராசனார்

குறள் 1128

Nenjaththaar Kaadha Lavaraaka Veydhuntal

Anjudhum Vepaak Karindhu

எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.

— மு. வரதராசனார்

குறள் 1129

Imaippin Karappaakku Arival Anaiththirke

Edhilar Ennum Iv Voor

கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.

— மு. வரதராசனார்

குறள் 1130

Uvandhuraivar Ullaththul Endrum Ikandhuraivar

Edhilar Ennum Iv Voor

காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

— மு. வரதராசனார்

Say thanks