அதிகாரம் 112 · நலம் புனைந்து உரைத்தல்

The Praise of her Beauty · காமத்துப்பால் · களவியல் · குறள் 1111–1120

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது, தலைமகன் தலைமகள் நலத்தைப் புனைந்து சொல்லியது . இது, புணர்ச்சி மகிழ்ந்துழி நிகழ்வதாகலின், புணர்ச்சி மகிழ்தலின் பின் வைக்கப்பட்டது .

குறள் 1111

Nanneerai Vaazhi Anichchame Ninninum

Menneeral Yaamveezh Paval

அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.

— மு. வரதராசனார்

குறள் 1112

Malarkaanin Maiyaaththi Nenje Ivalkan

Palarkaanum Poovokkum Endru

நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.

— மு. வரதராசனார்

குறள் 1113

Murimeni Muththam Muruval Verinaatram

Velunkan Veyththo Lavatku

மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.

— மு. வரதராசனார்

குறள் 1114

Kaanin Kuvalai Kavizhndhu Nilannokkum

Maanizhai Kannovvem Endru

குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

— மு. வரதராசனார்

குறள் 1115

Anichchappook Kaalkalaiyaal Peydhaal Nukappirku

Nalla Pataaa Parai

அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

— மு. வரதராசனார்

குறள் 1116

Madhiyum Matandhai Mukanum Ariyaa

Padhiyin Kalangiya Meen

விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

— மு. வரதராசனார்

குறள் 1117

Aruvaai Niraindha Avirmadhikkup Pola
Maruvunto Maadhar Mukaththu

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ. இல்லையே.

— மு. வரதராசனார்

குறள் 1118

Maadhar Mukampol Olivita Vallaiyel

Kaadhalai Vaazhi Madhi

திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

— மு. வரதராசனார்

குறள் 1119

Malaranna Kannaal Mukamoththi Yaayin

Palarkaanath Thondral Madhi

திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

— மு. வரதராசனார்

குறள் 1120

Anichchamum Annaththin Thooviyum Maadhar

Atikku Nerunjip Pazham

அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.

— மு. வரதராசனார்

Say thanks