அதிகாரம் 111 · புணர்ச்சி மகிழ்தல்

Rejoicing in the Embrace · காமத்துப்பால் · களவியல் · குறள் 1101–1110

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது, அங்ஙனம் குறிப்பறிந்து புணர்ந்த தலைமகன் அப்புணர்ச்சியினை மகிழ்ந்து கூறல் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 1101

Kantukettu Untuyirththu Utrariyum Aimpulanum

Ondhoti Kanne Ula

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

— மு. வரதராசனார்

குறள் 1102

Pinikku Marundhu Piraman Aniyizhai

Thannoikkuth Thaane Marundhu

நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

— மு. வரதராசனார்

குறள் 1103

Thaamveezhvaar Mendrol Thuyilin Inidhukol

Thaamaraik Kannaan Ulaku

தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ.

— மு. வரதராசனார்

குறள் 1104

Neengin Theruum Kurukungaal Thannennum

Theeyaantup Petraal Ival?

நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

— மு. வரதராசனார்

குறள் 1105

Vetta Pozhudhin Avaiyavai Polume

Thottaar Kadhuppinaal Thol

மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

— மு. வரதராசனார்

குறள் 1106

Urudhoru Uyirdhalirppath Theentalaal Pedhaikku

Amizhdhin Iyandrana Thol

பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

— மு. வரதராசனார்

குறள் 1107

Thammil Irundhu Thamadhupaaththu Untatraal

Ammaa Arivai Muyakku

அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.

— மு. வரதராசனார்

குறள் 1108

Veezhum Iruvarkku Inidhe Valiyitai

Pozhap Pataaa Muyakku

காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.

— மு. வரதராசனார்

குறள் 1109

Ootal Unardhal Punardhal Ivaikaamam

Kootiyaar Petra Payan

ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

— மு. வரதராசனார்

குறள் 1110

Aridhoru Ariyaamai Kantatraal Kaamam

Seridhorum Seyizhai Maattu

செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல், நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

— மு. வரதராசனார்

Say thanks