அதிகாரம் 110 · குறிப்பறிதல்

Recognition of the Signs · காமத்துப்பால் · களவியல் · குறள் 1091–1100

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது, தலைமகன் தலைமகள் குறிப்பினை அறிதலும், தோழி குறிப்பினை அறிதலும், அவள்தான் அவ்விருவர் குறிப்பினையும் அறிதலுமாம் . தகை அணங்குற்ற தலைமகன் தலைமகளைக் கூடுங்கால் இது வேண்டுமாகலின், தகை அணங்கு உறுத்தலின்பின் வைக்கப்பட்டது.

குறள் 1091

Irunokku Ivalunkan Ulladhu Orunokku

Noinokkon Rannoi Marundhu

இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

— மு. வரதராசனார்

குறள் 1092

Kankalavu Kollum Sirunokkam Kaamaththil

Sempaakam Andru Peridhu

கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.

— மு. வரதராசனார்

குறள் 1093

Nokkinaal Nokki Irainjinaal Aqdhaval

Yaappinul Attiya Neer

என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

— மு. வரதராசனார்

குறள் 1094

Yaannokkum Kaalai Nilannokkum Nokkaakkaal

Thaannokki Mella Nakum

யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

— மு. வரதராசனார்

குறள் 1095

Kurikkontu Nokkaamai Allaal Orukan

Sirakkaniththaal Pola Nakum

என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.

— மு. வரதராசனார்

குறள் 1096

Uraaa Thavarpol Solinum Seraaarsol

Ollai Unarap Patum

புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

— மு. வரதராசனார்

குறள் 1097

Seraaach Chirusollum Setraarpol Nokkum

Uraaarpondru Utraar Kurippu

பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

— மு. வரதராசனார்

குறள் 1098

Asaiyiyarku Untaantor Eeryaan Nokkap

Pasaiyinal Paiya Nakum

யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

— மு. வரதராசனார்

குறள் 1099

Edhilaar Polap Podhunokku Nokkudhal

Kaadhalaar Kanne Ula

புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

— மு. வரதராசனார்

குறள் 1100

Kannotu Kaninai Nokkokkin Vaaichchorkal

Enna Payanum Ila

கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.

— மு. வரதராசனார்

Say thanks