Anangukol Aaimayil Kollo Kananguzhai
Maadharkol Maalum En Nenju
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
— மு. வரதராசனார்
The Pre-marital love · காமத்துப்பால் · களவியல் · குறள் 1081–1090
அஃதாவது, பொழில் விளையாட்டு விருப்பான் ஆயம் நீங்க, அதன்கண் தமியளாய் நின்றாளை, வேட்ட விருப்பான் இளையார் நீங்கத் தமியனாய் வந்து கண்ணுற்ற தலைமகன், அவள் வனப்புத் தன்னை வருத்தம் உறுவித்தலைச் சொல்லுதல் . இது, கண்ணுற்ற பொழுதே நிகழ்வதாகலின், முதற்கண் கூறப்பட்டது .
Anangukol Aaimayil Kollo Kananguzhai
Maadharkol Maalum En Nenju
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
— மு. வரதராசனார்
Nokkinaal Nokkedhir Nokkudhal Thaakkanangu
Thaanaikkon Tanna Thutaiththu
நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.
— மு. வரதராசனார்
Pantariyen Kootren Padhanai Iniyarindhen
Pentakaiyaal Peramark Kattu
எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது
— மு. வரதராசனார்
Kantaar Uyirunnum Thotraththaal Pentakaip
Pedhaikku Amarththana Kan
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.
— மு. வரதராசனார்
Kootramo Kanno Pinaiyo Matavaral
Nokkamim Moondrum Utaiththu
எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.
— மு. வரதராசனார்
Kotumpuruvam Kotaa Maraippin Natungagnar
Seyyala Manival Kan
வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.
— மு. வரதராசனார்
Kataaak Kalitrinmer Katpataam Maadhar
Pataaa Mulaimel Thukil
மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.
— மு. வரதராசனார்
Onnudhar Koo Utaindhadhe Gnaatpinul
Nannaarum Utkumen Peetu
போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.
— மு. வரதராசனார்
Pinaiyer Matanokkum Naanum Utaiyaatku
Aniyevano Edhila Thandhu
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.
— மு. வரதராசனார்
Untaarkan Alladhu Atunaraak Kaamampol
Kantaar Makizhseydhal Indru
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.
— மு. வரதராசனார்