Alarezha Aaruyir Na�rkum Adhanaip
Palarariyaar Paakkiyath Thaal
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.
— மு. வரதராசனார்
The Announcement of the Rumour · காமத்துப்பால் · களவியல் · குறள் 1141–1150
அஃதாவது, களவொழுக்கம் வேண்டிய தலைமகன் பிறர் கூறுகின்ற அலர் தனக்காகின்றவற்றைத் தோழிக்கு அறிவுறுத்தலும், வரைவாக உடன் போக்காக ஒன்று வேண்டிய தலைமகளும் தோழியும் அவ்வலரை அவன்றனக்கு அறிவுறுத்தலும் ஆம் . இது நாணுத் துறந்தவழி நிகழ்வதாகலான், ணுத்துறவுஉரைத்தலின் பின் வைக்கப்ப்பட்டது.
Alarezha Aaruyir Na�rkum Adhanaip
Palarariyaar Paakkiyath Thaal
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.
— மு. வரதராசனார்
Malaranna Kannaal Arumai Ariyaadhu
Alaremakku Eendhadhiv Voor
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.
— மு. வரதராசனார்
Uraaadho Oorarindha Kelavai Adhanaip
Peraaadhu Petranna Neerththu
ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.
— மு. வரதராசனார்
Kavvaiyaal Kavvidhu Kaamam Adhuvindrel
Thavvennum Thanmai Izhandhu
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.
— மு. வரதராசனார்
Kaliththorum Kalluntal Vettatraal Kaamam
Velippatun Thorum Inidhu
காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.
— மு. வரதராசனார்
Kantadhu Mannum Orunaal Alarmannum
Thingalaip Paampukon Tatru
காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.
— மு. வரதராசனார்
Ooravar Kelavai Eruvaaka Annaisol
Neeraaka Neelumin Noi
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.
— மு. வரதராசனார்
Neyyaal Erinudhuppem Endratraal Kelavaiyaal
Kaamam Nudhuppem Enal
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.
— மு. வரதராசனார்
Alarnaana Olvadho Anjalompu Endraar
Palarnaana Neeththak Katai
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.
— மு. வரதராசனார்
Thaamventin Nalkuvar Kaadhalar Yaamventum
Kelavai Etukkumiv Voor
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.
— மு. வரதராசனார்