Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum
Vaanakamum Aatral Aridhu
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
— மு. வரதராசனார்
Gratitude · அறத்துப்பால் · இல்லறவியல் · குறள் 101–110
அஃதாவது, தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்திஇல் குற்றம் செய்ந்நன்றி கோறலேயாகலின், அதனைப் பாதுகாத்துக் கடிதற் பொருட்டு, இஃது இனியவை கூறலின்பின் வைக்கப்பட்டது.
Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum
Vaanakamum Aatral Aridhu
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
— மு. வரதராசனார்
Kaalaththi Naarseydha Nandri Siridheninum
Gnaalaththin Maanap Peridhu
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
— மு. வரதராசனார்
Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin
Nanmai Katalin Peridhu
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .
— மு. வரதராசனார்
Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak
Kolvar Payandheri Vaar
ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
— மு. வரதராசனார்
Udhavi Varaiththandru Udhavi Udhavi
Seyappattaar Saalpin Varaiththu
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
— மு. வரதராசனார்
Maravarka Maasatraar Kenmai Thuravarka
Thunpaththul Thuppaayaar Natpu
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .
— மு. வரதராசனார்
Ezhumai Ezhupirappum Ulluvar Thangan
Vizhuman Thutaiththavar Natpu
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
— மு. வரதராசனார்
Nandri Marappadhu Nandrandru Nandralladhu
Andre Marappadhu Nandru
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்.
— மு. வரதராசனார்
Kondranna Innaa Seyinum Avarseydha
Ondrunandru Ullak Ketum
முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
— மு. வரதராசனார்
Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai
Seynnandri Kondra Makarku
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
— மு. வரதராசனார்