அதிகாரம் 12 · நடுவு நிலைமை

Impartiality · அறத்துப்பால் · இல்லறவியல் · குறள் 111–120

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது, பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கும் நிலைமை . இது நன்றி செய்தார்மாட்டு அந்நன்றியினை நினைத்தவழிச் சிதையுமன்றே? அவ்விடத்துஞ் சிதையலாகாது என்றற்குச் செய்ந்நன்றி அறிதலின்கண் வைக்கப்பட்டது.

குறள் 111

Thakudhi Enavondru Nandre Pakudhiyaal

Paarpattu Ozhukap Perin

அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

— மு. வரதராசனார்

குறள் 112

Seppam Utaiyavan Aakkanj Chidhaivindri

Echchaththir Kemaappu Utaiththu

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

— மு. வரதராசனார்

குறள் 113

Nandre Tharinum Natuvikandhaam Aakkaththai

Andre Yozhiya Vital

தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

— மு. வரதராசனார்

குறள் 114

Thakkaar Thakavilar Enpadhu Avaravar

Echchaththaar Kaanap Patum

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

— மு. வரதராசனார்

குறள் 115

Ketum Perukkamum Illalla Nenjaththuk

Kotaamai Saandrork Kani

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

— மு. வரதராசனார்

குறள் 116

Ketuvalyaan Enpadhu Arikadhan Nenjam

Natuvoreei Alla Seyin

தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

— மு. வரதராசனார்

குறள் 117

Ketuvaaka Vaiyaadhu Ulakam Natuvaaka

Nandrikkan Thangiyaan Thaazhvu

நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

— மு. வரதராசனார்

குறள் 118

Samanseydhu Seerdhookkung Kolpol Amaindhorupaal

Kotaamai Saandrork Kani

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

— மு. வரதராசனார்

குறள் 119

Sorkottam Illadhu Seppam Orudhalaiyaa

Utkottam Inmai Perin

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

— மு. வரதராசனார்

குறள் 120

Vaanikam Seyvaarkku Vaanikam Penip

Piravum Thamapol Seyin

பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

— மு. வரதராசனார்

Say thanks