Insolaal Eeram Alaiip Patiruilavaam
Semporul Kantaarvaaich Chol
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
— மு. வரதராசனார்
The Utterance of Pleasant Words · அறத்துப்பால் · இல்லறவியல் · குறள் 91–100
அஃதாவது, மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல். இதுவும், விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதது ஆகலின், விருந்தோம்புதலின்பின் வைக்கப்பட்டது.
Insolaal Eeram Alaiip Patiruilavaam
Semporul Kantaarvaaich Chol
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
— மு. வரதராசனார்
Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu
Insolan Aakap Perin
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
— மு. வரதராசனார்
Mukaththaan Amarndhuinidhu Nokki Akaththaanaam
Inso Linadhe Aram
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
— மு. வரதராசனார்
Thunpurooum Thuvvaamai Illaakum Yaarmaattum
Inpurooum Inso Lavarkku
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
— மு. வரதராசனார்
Panivutaiyan Insolan Aadhal Oruvarku
Aniyalla Matrup Pira
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
— மு. வரதராசனார்
Allavai Theya Aramperukum Nallavai
Naati Iniya Solin
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
— மு. வரதராசனார்
Nayan Eendru Nandri Payakkum
Payaneendru Panpin Thalaippiriyaach Chol
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
— மு. வரதராசனார்
Sirumaiyul Neengiya Insol Marumaiyum
Immaiyum Inpam Tharum
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .
— மு. வரதராசனார்
Insol Inidheendral Kaanpaan Evankolo
Vansol Vazhangu Vadhu?
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
— மு. வரதராசனார்
Iniya Ulavaaka Innaadha Kooral
Kaniiruppak Kaaikavarn Thatru
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .
— மு. வரதராசனார்