- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
Kalagale nacchila kalaigal pidhatruva · Thiruppugazh 722 lyrics with meaning · Thiruvakkarai

ஓம் சண்முகா சரணம்திருப்புகழ் · பாடல் 722
ராகம் குந்தலவராளி · தாளம் ஆதிசந்தம் தனதன தத்தன தனதன தத்தன / தனதன தத்தன ... தனதானா
Kalagalenacchila kalaigal pidhatruvaThozhiva thunaicchiri thuraiyaadhe
Karuvazhidhaththiya maduva thanirpuguKadunara kukkidaiyidaiveezhaa
U lagu thanirpala piravi thariththaraVuzhalvadhu vittini yadinaayen
Unadhadi maiththiral adhaninu mudpadaVupaya malarppadha marulvaaye
Kulagiri pottezha alaigadal vatridaNisisaranaipporu mayilveeraa
Kunadhara viththaga kumara punaththidaiKuramagalaippunar manimaarpaa
Alaipuna litravazh valainila vaiththaruManidhiru vakkaraiyuraivone
Adiyava ricchaiyi levaiyevaiyutranaAvaidharu viththarul perumaale.
கலகலவென்று சில நூல்களைப் பிதற்றுவதே தவிர உன்னைச் சிறிதும் போற்றாமல், கருப்பையிலும் கொடிய நரகங்களிலும் விழுந்து, பல பிறவிகள் எடுத்து உழல்வதை விட்டு, இனியாவது நாய் போன்ற அடியேன் உன் அடியார் கூட்டத்தில் ஒருவனாகச் சேர, உன் இரு மலர்ப் பாதங்களை அருள்வாய். மலைகள் பொடியாக, கடல் வற்ற, அரக்கனோடு போர் செய்த மயில் வீரனே, தினைப்புனத்தில் குறமகளை மணந்தவனே. அலைநீரில் சங்குகள் நிலா ஒளி வீசும் திருவக்கரையில் உறைபவனே, அடியார்கள் விரும்புவது எதுவோ அதைத் தந்து அருளும் பெருமானே.
Instead of babbling through a few books without praising You at all, falling into the womb and into cruel hells again and again, wandering through many births, let me, Your lowly servant, at last join the company of Your devotees: grant me Your two flower feet. Peacock hero who fought the asura till mountains crumbled and the sea dried up, who wed the hill maiden in the millet field. You who dwell at lovely Thiruvakkarai, where conches drifting on the waves shine like moonlight, Lord who gives devotees whatever their hearts desire.
கலகல எனச் சில கலைகள் பிதற்றுவது ஒழிவது ... கலகலவென்று சில நூல்களைப் பிதற்றுவதே தவிர
doing nothing but babbling through a few books
உனைச் சிறிது உரையாதே ... உன்னைச் சிறிதும் போற்றாமல்
without praising You even a little
கருவழி தத்திய மடு அதனில் புகு ... கருப்பை என்ற குழியில் புகுந்து
entering the pit of the womb
கடு நரகுக்கு இடையிடை வீழா ... கொடிய நரகங்களில் இடையிடையே விழுந்து
falling now and then into cruel hells
உலகுதனில் பல பிறவி தரித்து அற உழல்வது விட்டு ... உலகில் பல பிறவிகள் எடுத்து மிகவும் உழல்வதை விட்டு
leaving behind this wandering through many births
இனி அடிநாயேன் ... இனியாவது நாய் போன்ற அடியேன்
now at last, I, Your lowly servant
உனது அடிமைத் திரள் அதனினும் உட்பட ... உன் அடியார் கூட்டத்தில் ஒருவனாகச் சேர
may join the company of Your devotees
உபய மலர்ப்பதம் அருள்வாயே ... உன் இரு மலர்ப் பாதங்களை அருள்வாய்
grant me Your two flower feet
குலகிரி பொட்டு எழ ... பெரிய மலைகள் பொடியாக
as the great mountains turned to dust
அலைகடல் வற்றிட ... அலைகடல் வற்ற
as the wave tossed sea dried up
நிசிசரனைப் பொரு மயில்வீரா ... அரக்கனோடு போர் செய்த மயில் வீரனே
peacock hero who fought the asura
குணதர வித்தக குமர ... நற்குணனே, ஞானியே, குமரனே
virtuous, wise Kumara
புனத்திடை குறமகளைப் புணர் மணிமார்பா ... தினைப்புனத்தில் குறமகளை மணந்த அழகிய மார்பனே
handsome one who wed the hill maiden in the millet field
அலை புனலில் தவழ் வளை நிலவைத் தரும் ... அலைநீரில் தவழும் சங்குகள் நிலா ஒளி வீசும்
where conches drifting on the waves shine like moonlight
அணி திருவக்கரை உறைவோனே ... அழகிய திருவக்கரையில் உறைபவனே
You who dwell at lovely Thiruvakkarai
அடியவர் இச்சையில் எவை எவை உற்றன ... அடியார்கள் மனதில் விரும்புவது எதுவோ
whatever devotees desire in their hearts
அவை தருவித்து அருள் பெருமாளே ... அவற்றை எல்லாம் தந்து அருளும் பெருமானே
Lord who grants it all
எல்லாப் பாடல்களும் · All songsஎல்லாத் தலங்களும் · All shrines