- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
Aruvarai yeduththa veera neripada · Thiruppugazh 655 lyrics with meaning · Vayiravivanam

ஓம் சண்முகா சரணம்திருப்புகழ் · பாடல் 655
ராகம் ஸரஸ்வதி இதாளம் - அங்கதாளம் (5 1/2) (தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2)சந்தம் தனதன தனத்த தான தனதன தனத்த தான / தனதன தனத்த தான ... தனதான
Aruvaraiyeduththa veeraneripada virarkaloonuMaranida mirukku maayi yarulvone
Alaigada ladaiththa raaman migamana magizhcchi kooruManimayila nadaththu maasai marugone
Parudhiyinolikkan veerum arumuga niraiththa tholpaNirugara miguththa paara murugaanin
Padhamalarulaththinaalu ninaivuru karuththar thaalkalPaniyavu menakku njaanam arulvaaye
Surudhigaluraiththa vedhanuraimozhi thanak kulaadhiSoluvena vuraiththa njaana kurunaadhaa
Surarpadhi thazhaiththu vaazha amarsirai yanaiththu meelaThunipada arakkar maala vidumvelaa
Marumalar manakkum vaasa niraidharu tharukkal soozhumVayalpudai kidakku neela malarvaavi
Valamuru thadaththinodu sarasvadhi nadhikkan veeruVayiravi vanaththil mevu perumaale.
கயிலையைத் தூக்கிய இராவணனைக் கால் விரலால் அழுத்திய சிவனின் இடப்பாகத்தில் உள்ள அன்னையின் மகனே. கடலை அணை கட்டிய இராமன் மகிழும் மருகனே, சூரியனைப் போல ஒளிரும் ஆறுமுகமும் பன்னிரு தோள்களும் கொண்ட முருகா. உன் திருவடியை நினைக்கும் அடியார்களின் தாள்களைப் பணியும் ஞானத்தை எனக்குத் தருவாய். பிரமனுக்கு ஓம் என்ற முதல் எழுத்தின் பொருளைச் சொன்ன குருநாதனே, தேவர்களைச் சிறையிலிருந்து மீட்டு அரக்கரை அழித்த வேலனே. மணம் நிறைந்த மரங்களும் வயல்களும் சூழ்ந்த சரசுவதி நதிக்கரை வயிரவிவனத்தில் வீற்றிருக்கும் பெருமானே.
You are the son of the Mother who sits beside Shiva, who pressed down Ravana with His toe when he lifted the great mountain. You are the nephew who delights Rama, builder of the bridge over the sea, with six faces bright as the sun and twelve mighty arms. Grant me the wisdom to bow at the feet of devotees who always keep Your feet in mind. Guru who told Brahma the meaning of the first sacred sound, Your spear freed the devas from prison and ended the demons. You dwell at Vayiravivanam on the Saraswati river, among fragrant groves, fields and lotus ponds.
அருவரை எடுத்த வீரன் ... பெரிய கயிலை மலையைத் தூக்கிய வீரனான இராவணன்
Ravana, the strongman who lifted Kailash
நெரிபட விரல்கள் ஊனும் ... நசுங்கும்படி கால் விரலை ஊன்றிய
pressed down with a toe so he was crushed
அரன் இடம் இருக்கும் ஆயி அருள்வோனே ... அந்தச் சிவனின் இடப்பாகத்தில் இருக்கும் அன்னை பார்வதி பெற்ற மகனே
son of the Mother on Shiva's left side
அலைகடல் அடைத்த ராமன் ... அலைகடலில் அணை கட்டிய இராமன்
Rama who bridged the sea
மிக மனமகிழ்ச்சி கூரும் ... மிகவும் மனம் மகிழும்
who rejoices greatly in
அணி மயில் நடத்தும் ஆசை மருகோனே ... அழகிய மயிலைச் செலுத்தும் அன்பு மருமகனே
his dear nephew who rides the fine peacock
பருதியின் ஒளிக்கண் வீறும் அறுமுக ... சூரியனைவிட ஒளி மிகுந்த ஆறு முகங்கள் உடையவனே
Six Faced One brighter than the sun
நிரைத்த தோள் பனிருகரம் மிகுத்த பார முருகா ... வரிசையான தோள்களும் பன்னிரண்டு கைகளும் கொண்ட பெருமைமிக்க முருகா
great Murugan with rows of shoulders and twelve arms
நின் பதமலர் உளத்தில் நாளும் நினைவுறு கருத்தர் ... உன் திருவடி மலரை உள்ளத்தில் தினமும் நினைக்கும் அன்பர்களின்
of devotees who daily hold Your lotus feet in mind
தாள்கள் பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே ... பாதங்களை வணங்கும் ஞானத்தை எனக்கு அருள்வாய்
grant me the wisdom to bow at their feet
சுருதிகள் உரைத்த வேதன் ... வேதங்களை ஓதும் பிரமனிடம்
to Brahma who recites the Vedas
உரைமொழி தனக்குள் ஆதி சொலு என உரைத்த ... "உன் மொழிக்குள் முதலான ஓம் என்பதன் பொருளைச் சொல்" என்று கேட்ட
who said "explain the first word, Om"
ஞான குருநாதா ... ஞான குருவே
guru of wisdom
சுரர்பதி தழைத்து வாழ ... தேவர் தலைவன் இந்திரன் செழித்து வாழ
so that Indra, king of gods, may flourish
அமர் சிறை அனைத்தும் மீள ... தேவர்கள் எல்லோரும் சிறையிலிருந்து மீள
so all the gods are freed from prison
துணிபட அரக்கர் மாள விடும் வேலா ... அசுரர்கள் துண்டாகி அழிய வேலை ஏவியவனே
who hurled the spear that cut down the asuras
மருமலர் மணக்கும் வாசம் நிறைதரு தருக்கள் சூழும் ... மணமுள்ள மலர்கள் நிறைந்த மரங்கள் சூழ்ந்த
ringed by trees full of fragrant flowers
வயல்புடை கிடக்கும் நீலமலர் வாவி ... வயல்களின் அருகே நீல மலர்க் குளங்கள் உள்ள
with blue lily ponds beside the fields
வளமுறு தடத்தினோடு ... வளமான நீர்நிலைகளோடு
with rich waters
சரஸ்வதி நதிக்கண் வீறு ... சரஸ்வதி நதிக்கரையில் சிறந்து விளங்கும்
shining on the Saraswati river
வயிரவி வனத்தில் மேவு பெருமாளே ... வயிரவிவனத்தில் வீற்றிருக்கும் பெருமானே
Lord of Vayiravivanam
எல்லாப் பாடல்களும் · All songsஎல்லாத் தலங்களும் · All shrines