அதிகாரம் 38 · ஊழ்

Fate · அறத்துப்பால் · ஊழியல் · குறள் 371–380

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது, இருவினைப்பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி. ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதியென்பன ஒருபொருட்கிளவி. இது பொருள் இன்பங்கள் இரண்டிற்கும் பொதுவாய் ஒன்றனுள் வைக்கப் படாமையானும், மேற்கூறிய அறத்தோடு இயைபு உடைமையானும், அதனது இறுதிக்கண் வைக்கப்பட்டது.

குறள் 371

Aakoozhaal Thondrum Asaivinmai Kaipporul

Pokoozhaal Thondrum Mati

கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.

— மு. வரதராசனார்

குறள் 372

Pedhaip Patukkum Izhavoozh Arivakatrum

Aakaloozh Utrak Katai

பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.

— மு. வரதராசனார்

குறள் 373

Nunniya Noolpala Karpinum Matrundhan

Unmai Yarive Mikum

ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

— மு. வரதராசனார்

குறள் 374

Iruveru Ulakaththu Iyarkai Thiruveru

Thelliya Raadhalum Veru

உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.

— மு. வரதராசனார்

குறள் 375

Nallavai Ellaaan Theeyavaam Theeyavum

Nallavaam Selvam Seyarku

செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

— மு. வரதராசனார்

குறள் 376

Pariyinum Aakaavaam Paalalla Uyththuch

Choriyinum Pokaa Thama

ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.

— மு. வரதராசனார்

குறள் 377

Vakuththaan Vakuththa Vakaiyallaal Koti

Thokuththaarkku Thuyththal Aridhu

ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

— மு. வரதராசனார்

குறள் 378

Thurappaarman Thuppura Villaar Urarpaala

Oottaa Kazhiyu Menin

வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

— மு. வரதராசனார்

குறள் 379

Nandraangaal Nallavaak Kaanpavar Andraangaal

Allar Patuva Thevan?

நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.

— மு. வரதராசனார்

குறள் 380

Oozhir Peruvali Yaavula Matrondru

Soozhinun Thaanmun Thurum

ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

— மு. வரதராசனார்

Say thanks