Avaaenpa Ellaa Uyirkkum Enj
Gnaandrum Thavaaap Pirappeenum Viththu
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.
— மு. வரதராசனார்
Curbing of Desire · அறத்துப்பால் · துறவறவியல் · குறள் 361–370
அஃதாவது, முன்னும் பின்னும் வினைத்தொடர்பு அறுத்தார்க்கு நடுவுநின்ற உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களும் நின்றமையின், வேதனை பற்றி ஒரோவழித் துறக்கப்பட்ட புலன்கள்மேல் பழைய பயிற்சி வயத்தான் நினைவு செல்லுமன்றே? அந்நினைவும் அவிச்சை எனப் பிறவிக்கு வித்து ஆம் ஆகலின், அதனை இடைவிடாது மெய்ப்பொருள் உணர்வான் அறுத்தல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.
Avaaenpa Ellaa Uyirkkum Enj
Gnaandrum Thavaaap Pirappeenum Viththu
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.
— மு. வரதராசனார்
Ventungaal Ventum Piravaamai Matradhu
Ventaamai Venta Varum
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
— மு. வரதராசனார்
Ventaamai Anna Vizhuchchelvam Eentillai
Aantum Aqdhoppadhu Il
அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.
— மு. வரதராசனார்
Thoouymai Enpadhu Avaavinmai Matradhu
Vaaaimai Venta Varum
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
— மு. வரதராசனார்
Atravar Enpaar Avaaatraar Matraiyaar
Atraaka Atradhu Ilar
பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
— மு. வரதராசனார்
Anjuva Thorum Arane Oruvanai
Vanjippa Thorum Avaa
ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.
— மு. வரதராசனார்
Avaavinai Aatra Aruppin Thavaavinai
Thaanventu Maatraan Varum
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.
— மு. வரதராசனார்
Avaaillaark Killaakun Thunpam Aqdhuntel
Thavaaadhu Menmel Varum
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.
— மு. வரதராசனார்
Inpam Itaiyaraa Theentum Avaavennum
Thunpaththul Thunpang Ketin
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.
— மு. வரதராசனார்
Aaraa Iyarkai Avaaneeppin Annilaiye
Peraa Iyarkai Tharum
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.
— மு. வரதராசனார்