Aravinai Yaadhenin Kollaamai Koral
Piravinai Ellaan Tharum
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
— மு. வரதராசனார்
Not killing · அறத்துப்பால் · துறவறவியல் · குறள் 321–330
அஃதாவது, ஐயறிவு உடையன முதல் ஓர் அறிவுடையன ஈறாய உயிர்களைச் சோர்ந்தும் கொல்லுதலைச் செய்யாமை, இதுமேற்கூறிய அறங்கள் எல்லாவற்றினும் சிறப்புடைத்தாய்க்கூறாத அறங்களையும் அகப்படுத்து நிற்றலின், இறுதிக்கண்வைக்கப்பட்டது.
Aravinai Yaadhenin Kollaamai Koral
Piravinai Ellaan Tharum
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
— மு. வரதராசனார்
Pakuththuntu Palluyir Ompudhal Noolor
Thokuththavatrul Ellaan Thalai
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
— மு. வரதராசனார்
Ondraaka Nalladhu Kollaamai Matradhan
Pinsaarap Poiyaamai Nandru
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
— மு. வரதராசனார்
Nallaaru Enappatuvadhu Yaadhenin Yaadhondrum
Kollaamai Soozhum Neri
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
— மு. வரதராசனார்
Nilaianji Neeththaarul Ellaam Kolaianjik
Kollaamai Soozhvaan Thalai
வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.
— மு. வரதராசனார்
Kollaamai Merkon Tozhukuvaan Vaazhnaalmel
Sellaadhu Uyirunnung Kootru
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.
— மு. வரதராசனார்
Thannuyir Neeppinum Seyyarka Thaanpiridhu
Innuyir Neekkum Vinai
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
— மு. வரதராசனார்
Nandraakum Aakkam Peridheninum Saandrorkkuk
Kondraakum Aakkang Katai
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.
— மு. வரதராசனார்
Kolaivinaiya Raakiya Maakkal Pulaivinaiyar
Punmai Therivaa Rakaththu
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.
— மு. வரதராசனார்
Uyir Utampin Neekkiyaar Enpa
Seyir Utampin Sellaaththee Vaazhkkai
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
— மு. வரதராசனார்