அதிகாரம் 2 · வான்சிறப்பு

The Blessing of Rain · அறத்துப்பால் · பாயிரவியல் · குறள் 11–20

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது, அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 11

Vaannindru Ulakam Vazhangi Varudhalaal

Thaanamizhdham Endrunarar Paatru

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்

— மு. வரதராசனார்

குறள் 12

Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth

Thuppaaya Thooum Mazhai

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

— மு. வரதராசனார்

குறள் 13

Vinindru Poippin Virineer Viyanulakaththu

Ulnindru Utatrum Pasi

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்

— மு. வரதராசனார்

குறள் 14

Erin Uzhaaar Uzhavar Puyalennum

Vaari Valangundrik Kaal

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்

— மு. வரதராசனார்

குறள் 15

Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange

Etuppadhooum Ellaam Mazhai

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்

— மு. வரதராசனார்

குறள் 16

Visumpin Thuliveezhin Allaalmar Raange

Pasumpul Thalaikaanpu Aridhu

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது

— மு. வரதராசனார்

குறள் 17

Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili

Thaannalkaa Thaaki Vitin

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்

— மு. வரதராசனார்

குறள் 18

Sirappotu Poosanai Sellaadhu Vaanam

Varakkumel Vaanorkkum Eentu

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது

— மு. வரதராசனார்

குறள் 19

Thaanam Thavamirantum Thangaa Viyanulakam

Vaanam Vazhangaa Thenin

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

— மு. வரதராசனார்

குறள் 20

Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum

Vaanindru Amaiyaadhu Ozhukku

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்

— மு. வரதராசனார்

Say thanks