அதிகாரம் 125 · நெஞ்சொடு கிளத்தல்

Soliloquy · காமத்துப்பால் · கற்பியல் · குறள் 1241–1250

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது, ஆற்றாமை மீதூரத் தனக்கு ஓர் பற்றுக்கோடு காணாத் தலைமகள் தன் நெஞ்சொடு செய்திறன் அறியாது சொல்லுதல் . இஃது, உறுப்புக்கள் தம் நலனழிந்தவழி நிகழ்வதாலின், உறுப்பு நலன் அழிதலின்பின் வைக்கப்பட்டது.

குறள் 1241

Ninaiththondru Sollaayo Nenje Enaiththondrum

Evvanoi Theerkkum Marundhu

நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?

— மு. வரதராசனார்

குறள் 1242

Kaadhal Avarilar Aakanee Novadhu

Pedhaimai Vaazhiyen Nenju

என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!

— மு. வரதராசனார்

குறள் 1243

Irundhulli Enparidhal Nenje Parindhullal

Paidhalnoi Seydhaarkan Il

நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!

— மு. வரதராசனார்

குறள் 1244

Kannum Kolachcheri Nenje Ivaiyennaith

Thinnum Avarkkaanal Utru

நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

— மு. வரதராசனார்

குறள் 1245

Setraar Enakkai Vitalunto Nenjeyaam

Utraal Uraaa Thavar

நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?

— மு. வரதராசனார்

குறள் 1246

Kalandhunarththum Kaadhalark Kantaar Pulandhunaraai

Poikkaaivu Kaaidhien Nenju

என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.

— மு. வரதராசனார்

குறள் 1247

Kaamam Vituondro Naanvitu Nannenje

Yaano Poreniv Virantu

நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

— மு. வரதராசனார்

குறள் 1248

Parindhavar Nalkaarendru Engip Pirindhavar

Pinselvaai Pedhaien Nenju

என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.

— மு. வரதராசனார்

குறள் 1249

Ullaththaar Kaadha Lavaraal Ullinee

Yaaruzhaich Cheriyen Nenju

என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?

— மு. வரதராசனார்

குறள் 1250

Thunnaath Thurandhaarai Nenjaththu Utaiyemaa

Innum Izhaththum Kavin

நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

— மு. வரதராசனார்

Say thanks