Kaadhalar Thoodhotu Vandha Kanavinukku
Yaadhusey Venkol Virundhu
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?
— மு. வரதராசனார்
The Visions of the Night · காமத்துப்பால் · கற்பியல் · குறள் 1211–1220
அஃதாவது, தலைமகள் தான் கண்ட கனவினது நிலைமையைத் தோழிக்குச் சொல்லுதல் . அக் கனவு, நனவின்கண் நினைவு மிகுதியாற்கண்டதாகலின், இது நினைந்தவர் புலம்பலின் பின் வைக்கப்பட்டது .
Kaadhalar Thoodhotu Vandha Kanavinukku
Yaadhusey Venkol Virundhu
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?
— மு. வரதராசனார்
Kayalunkan Yaanirappath Thunjir Kalandhaarkku
Uyalunmai Saatruven Man
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.
— மு. வரதராசனார்
Nanavinaal Nalkaa Thavaraik Kanavinaal
Kaantalin Unten Uyir
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
— மு. வரதராசனார்
Kanavinaan Untaakum Kaamam Nanavinaan
Nalkaarai Naatith Thararku
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.
— மு. வரதராசனார்
Nanavinaal Kantadhooum Aange Kanavundhaan
Kanta Pozhudhe Inidhu
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.
— மு. வரதராசனார்
Nanavena Ondrillai Aayin Kanavinaal
Kaadhalar Neengalar Man
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.
— மு. வரதராசனார்
Nanavinaal Nalkaak Kotiyaar Kanavanaal
Enemmaip Peezhip Padhu
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?
— மு. வரதராசனார்
Thunjungaal Tholmelar Aaki Vizhikkungaal
Nenjaththar Aavar Viraindhu
தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்.
— மு. வரதராசனார்
Nanavinaal Nalkaarai Novar Kanavinaal
Kaadhalark Kaanaa Thavar
கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.
— மு. வரதராசனார்
Nanavinaal Namneeththaar Enpar Kanavinaal
Kaanaarkol Ivvoo Ravar
நனவில் நம்மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?
— மு. வரதராசனார்