Ullinum Theeraap Perumakizh Seydhalaal
Kallinum Kaamam Inidhu
நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.
— மு. வரதராசனார்
Sad Memories · காமத்துப்பால் · கற்பியல் · குறள் 1201–1210
அஃதாவது, முன் கூடிய ஞான்றே இன்பத்தினை நினைந்து தலைமகள் தனிமை எய்தலும், பாசறைக்கண் தலைமகன் தனிமை எய்தலுமாம் . இவ்வாறு இருவர்க்கும் பொதுவாதல் பற்றிப் பன்மைப்பாலாற் கூறப்பட்டது. இது படர் மிகுதி தன்கண்ணதாக நினைந்த தலைமகட்கும் உரித்தாகலின் அவ்வியைபுபற்றித் தனிப்படர் மிகுதியின்பின் வைக்கப்பட்டது.
Ullinum Theeraap Perumakizh Seydhalaal
Kallinum Kaamam Inidhu
நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.
— மு. வரதராசனார்
Enaiththonaru Inidhekaan Kaamamdhaam Veezhvaar
Ninaippa Varuvadhondru El
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.
— மு. வரதராசனார்
Ninaippavar Pondru Ninaiyaarkol Thummal
Sinaippadhu Pondru Ketum
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?
— மு. வரதராசனார்
Yaamum Ulengol Avarnenjaththu Ennenjaththu
Oo Ulare Avar
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ?
— மு. வரதராசனார்
Thamnenjaththu Emmaik Katikontaar Naanaarkol
Emnenjaththu Ovaa Varal
தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?
— மு. வரதராசனார்
Matriyaan Ennulen Manno Avaroti
Yaan Utranaal Ulla Ulen
காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?
— மு. வரதராசனார்
Marappin Evanaavan Markol Marappariyen
Ullinum Ullam Sutum
( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?
— மு. வரதராசனார்
Enaiththu Ninaippinum Kaayaar Anaiththandro
Kaadhalar Seyyum Sirappu
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!
— மு. வரதராசனார்
Viliyumen Innuyir Verallam Enpaar
Aliyinmai Aatra Ninaindhu
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.
— மு. வரதராசனார்
Vitaaadhu Sendraaraik Kanninaal Kaanap
Pataaadhi Vaazhi Madhi
தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!
— மு. வரதராசனார்