Utranoi Nondral Uyirkkurukan Seyyaamai
Atre Thavaththir Kuru
தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்
— மு. வரதராசனார்
Penance · அறத்துப்பால் · துறவறவியல் · குறள் 261–270
அஃதாவது, மனம் பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயில்நிலை நிற்றலும், மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துப் பிற உயிர்களை ஓம்புதல், புலான் மறுத்து உயிர்கண்மேல் அருள் முதிர்ந்துழிச் செய்யப்படுவது ஆகலின், இது புலால் மறுத்தலின்பின் வைக்கப்பட்டது.
Utranoi Nondral Uyirkkurukan Seyyaamai
Atre Thavaththir Kuru
தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்
— மு. வரதராசனார்
Thavamum Thavamutaiyaarkku Aakum Adhanai
Aqdhilaar Merkol Vadhu
தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.
— மு. வரதராசனார்
Thurandhaarkkuth Thuppuravu Venti Marandhaarkol
Matrai Yavarkal Thavam
துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ
— மு. வரதராசனார்
Onnaarth Theralum Uvandhaarai Aakkalum
Ennin Thavaththaan Varum
தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.
— மு. வரதராசனார்
Ventiya Ventiyaang Keydhalaal Seydhavam
Eentu Muyalap Patum
விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.
— மு. வரதராசனார்
Thavanj Cheyvaar Thangarumanj Cheyvaarmar
Rallaar Avanjeyvaar Aasaiyut Pattu
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.
— மு. வரதராசனார்
Sutachchutarum Ponpol Olivitum Thunpanjjch
Utachchuta Norkir Pavarkku
புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்
— மு. வரதராசனார்
Thannuyir Thaanarap Petraanai Enaiya
Mannuyi Rellaan Thozhum
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
— மு. வரதராசனார்
Kootram Kudhiththalum Kaikootum Notralin
Aatral Thalaippat Tavarkkul
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்
— மு. வரதராசனார்
Ilarpala Raakiya Kaaranam Norpaar
Silarpalar Nolaa Thavar
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
— மு. வரதராசனார்