அதிகாரம் 24 · புகழ்

Renown · அறத்துப்பால் · இல்லறவியல் · குறள் 231–240

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது, இல்வாழ்க்கை முதல் ஈகை ஈறாகச் சொல்லப்பட்ட இல்லறத்தின் வழுவாதார்க்கு இம்மைப்பயனாகிய இவ்வுலகின்கண் நிகழ்ந்து இறவாது நிற்கும் கீர்த்தி. இது, பெரும்பான்மையும் ஈதல் பற்றி வருதலின், அதன்பின் வைக்கப்பட்டது.

குறள் 231

Eedhal Isaipata Vaazhdhal Adhuvalladhu

Oodhiyam Illai Uyirkku

வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

— மு. வரதராசனார்

குறள் 232

Uraippaar Uraippavai Ellaam Irappaarkkondru

Eevaarmel Nirkum Pukazh

புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

— மு. வரதராசனார்

குறள் 233

Ondraa Ulakaththu Uyarndha Pukazhallaal

Pondraadhu Nirpadhon Ril

உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

— மு. வரதராசனார்

குறள் 234

Nilavarai Neelpukazh Aatrin Pulavaraip

Potraadhu Puththel Ulaku

நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது..

— மு. வரதராசனார்

குறள் 235

Naththampol Ketum Uladhaakum Saakkaatum

Viththakark Kallaal Aridhu

புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.

— மு. வரதராசனார்

குறள் 236

Thondrin Pukazhotu Thondruka Aqdhilaar

Thondralin Thondraamai Nandru

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

— மு. வரதராசனார்

குறள் 237

Pukazhpata Vaazhaadhaar Thannovaar Thammai

Ikazhvaarai Novadhu Evan?

தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?

— மு. வரதராசனார்

குறள் 238

Vasaiyenpa Vaiyaththaark Kellaam Isaiyennum

Echcham Peraaa Vitin

தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

— மு. வரதராசனார்

குறள் 239

Vasaiyilaa Vanpayan Kundrum Isaiyilaa

Yaakkai Poruththa Nilam

புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

— மு. வரதராசனார்

குறள் 240

Vasaiyozhiya Vaazhvaare Vaazhvaar Isaiyozhiya

Vaazhvaare Vaazhaa Thavar

தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.

— மு. வரதராசனார்

Say thanks