அதிகாரம் 133 · ஊடலுவகை

The Pleasures of Temporary Variance · காமத்துப்பால் · கற்பியல் · குறள் 1321–1330

Thanks
பயிற்சி
அதிகார முன்னுரை · பரிமேலழகர்

அஃதாவது, அப்பெற்றித்தாய ஊடலால் தமக்குக் கூடல் இன்பம் சிறந்துழி, அச்சிறப்பிற்கு ஏதுவாய அவ்வூடலைத் தலைமகள் உவத்தலும், தலைமகன் உவத்தலும் ஆம் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.

குறள் 1321

Illai Thavaravarkku Aayinum Ootudhal

Valladhu Avaralikku Maaru

அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.

— மு. வரதராசனார்

குறள் 1322

Ootalin Thondrum Sirudhuni Nallali

Vaatinum Paatu Perum

ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.

— மு. வரதராசனார்

குறள் 1323

Pulaththalin Puththelnaatu Unto Nilaththotu

Neeriyain Thannaar Akaththu

நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.

— மு. வரதராசனார்

குறள் 1324

Pulli Vitaaap Pulaviyul Thondrumen

Ullam Utaikkum Patai

காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.

— மு. வரதராசனார்

குறள் 1325

Thavarilar Aayinum Thaamveezhvaar Mendrol

Akaralin Aangon Rutaiththu

தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.

— மு. வரதராசனார்

குறள் 1326

Unalinum Untadhu Aralinidhu Kaamam

Punardhalin Ootal Inidhu

உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.

— மு. வரதராசனார்

குறள் 1327

Ootalil Thotravar Vendraar Adhumannum

Kootalir Kaanap Patum

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை, ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

— மு. வரதராசனார்

குறள் 1328

Ootip Perukuvam Kollo Nudhalveyarppak

Kootalil Thondriya Uppu

நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.

— மு. வரதராசனார்

குறள் 1329

Ootuka Manno Oliyizhai Yaamirappa

Neetuka Manno Iraa

காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

— மு. வரதராசனார்

குறள் 1330

Ootudhal Kaamaththirku Inpam Adharkinpam

Kooti Muyangap Perin

காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

— மு. வரதராசனார்

Say thanks